பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்திய சஜீத்!

பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்திய சஜீத்!

Update: 2020-12-23 11:01 GMT

நாட்டில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யும் 'லவ் ஜிகாத்' குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதனைத் தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டன. தற்போது அதன் கீழ் பல வழக்குகள் பதிவாகி வருகின்றன. தற்போது அந்த புதிய சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. 

டிசம்பர் 19 இல் குற்றவாளி முகமது சயீத்தை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. இவர் 45 வயது பெண்ணை கட்டாயமாகத் திருமணம் செய்துகொண்டு மற்றும் கட்டாய மதமாற்றத்துக்கு அச்சுறுத்தி வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவர் தனது உண்மை அடையாளத்தை மறைத்து சுனில் குமார் என்று அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் செய்து வந்துள்ளார். அப்போது அவர் பல நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவரை மிரட்டி வந்துள்ளார். 

டிசம்பர் 10 இல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார், சயீத்தைத்  தொடர்ந்து அந்த பெண்ணை மதமாற்றம் செய்துகொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு அச்சுறுத்தி வந்தாக தெரிவித்துள்ளார். மேலும் நிக்கா கான பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவ விஷ்வ இந்து பரிசத்தின் ராஜேஷ் அவஸ்தி முன்வந்தார். இந்த திருமணத்திற்குச் சாட்சி கையெழுத்திட்ட 12 பேர் மீது அவர் வழக்குப் பதிவு செய்துள்ளார். சயீத் மீது கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என்றும் SP குமார் தெரிவித்தார். 

மேலும் சயீத் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் வைத்து பலாத்காரம் செய்து அந்த புகைப் படங்களை எடுத்துள்ளதாகவும் SP குமார் தெரிவித்தார். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாகவும் அச்சுறுத்தி வந்துள்ளார்.வழக்குப் பதிவு செய்த பின்னர் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News