மெகபூபா முப்தி இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற விரும்புகிறார்: உத்தரபிரதேச மாநில அமைச்சர் பேட்டி.!
உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சட்டசபை விவகாரத்துறை இணை அமைச்சராக இருப்பவர் ஆன்ந்த் ஸ்வரூப் சுக்லா நேற்று பல்லியாவில் உள்ள தனது இல்லத்தில் பேட்டி அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சட்டசபை விவகாரத்துறை இணை அமைச்சராக இருப்பவர் ஆன்ந்த் ஸ்வரூப் சுக்லா நேற்று பல்லியாவில் உள்ள தனது இல்லத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது: சமாஜ்வாடி, மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் சிறுபான்மையினருக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக பாகிஸ்தான் வாழ்க என கூறுகின்றனர். அதே போன்று பாகிஸ்தானுக்கு சென்றால் அங்கு பாகிஸ்தான் வாழ்க எனவும், இந்துஸ்தான் ஒழிக எனவும் கோஷங்கள் எழுப்புகின்றனர்.
அவர்களுக்கு அரசியல் கண்ணியம் எதுவுமே இல்லை. எனவே மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியின் இதயம் எல்லாம் பாகிஸ்தானில் உள்ளது. அவர் இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற விரும்புகிறார். அவருக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய பாசம் உள்ளது. எனவே அந்நாட்டு மீது பாசம் இருந்தால் பாகிஸ்தானுக்கே போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.