பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!
பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பசுக்களை வதை செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு பசு பாதுகாவலர்கள் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தாலும், ஒரு சில இடங்களில் இதனை தடுக்க முடியவில்லை. இப்படியே போனால் வருங்காலங்களில் பசுக்கள் இல்லாத நிலை ஏற்படாலம் என்று அச்சம் அடைந்து பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் பசுக்களை பாதுகாக்க தனித்துறையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அப்படி முதன் முதலாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகத்தை உருவாக்க மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ‘‘மத்தியப் பிரதேச மாநிலத்தில், பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஆகி துறைகளும் இடம் பெறும்.
கோபாஷ்டமியான வரும் 22ம் தேதி, அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.