எந்த கேள்வி வேண்டும் கேளுங்கள்.. விவாதம் நடத்த மத்திய அரசு தயார்.. கொட்டும் மழையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி.!

அனைத்து விவகாரங்களை பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், மத்திய அரசு அளிக்கும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும்.;

Update: 2021-07-19 06:56 GMT
எந்த கேள்வி வேண்டும் கேளுங்கள்.. விவாதம் நடத்த மத்திய அரசு தயார்.. கொட்டும் மழையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி.!

டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித் பிரதமர் மோடி குடைபிடித்தபடி பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. எதிக்கட்சிகள் கடினமான கேள்விகளை கேட்கட்டும். ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.


அனைத்து விவகாரங்களை பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், மத்திய அரசு அளிக்கும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போன்று வலுவானவர்களாக உருவாக வேண்டும். கொரோனா தொற்றில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Tags:    

Similar News