என்95க்கு பதில் 'எஸ்.எச்.ஜி95 மிக குறைந்த விலையில் முககவசம்.. மத்திய தொழில்நுட்ப துறை சாதனை.!
என் 95 முகக்கவசங்களுக்கு பதிலாக வைரஸ், மற்றும் நுண் கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்கின்ற மிகக் குறைந்த வகையில் 'எஸ்.எச்.ஜி95 முககவசங்களை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
என் 95 முகக்கவசங்களுக்கு பதிலாக வைரஸ், மற்றும் நுண் கிருமிகளிடம் இருந்து மனிதர்களை பாதுகாக்கின்ற மிகக் குறைந்த வகையில் 'எஸ்.எச்.ஜி95 முககவசங்களை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய பங்காக உள்ளது முககவசம் மற்றும் கிருமிநாசினி மட்டுமே. அனைவரும் உபயோகித்து வருகின்றனர். இதனால் முககவசங்களை மற்ற நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்க தொடங்கியதால் சாதாரன ஏழை மக்கள் முககவசங்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனிடையே வசதி படைத்தவர்கள் மற்றும் மருத்துவர்கள் என்95 முககவசங்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதுதான் மிகப்பெரிய பாதுகாப்பாக இருப்பதாக கருதினர். ஆனால் இதன் விலை அதிகமாக இருந்தது.
இதனை சரிசெய்யும் விதமாக கோவிட்19 நிதித் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பிஐஆர்ஏசி), ஐகேபி நாலேஜ் பார்க் உள்ளிட்ட அமைப்புகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்ற தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கி வந்தது.
இதனால் எஸ்.எச்.ஜி95 என்ற மிகவும் வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. இது ரூ. 50 முதல் 75 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வந்தால் மற்ற நிறுவனங்களின் முககவசங்களின் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.