Phone Pay வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி !

போன் பே வாடிக்கையாளர்கள் ரீசாஜ் செய்தால் இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-26 04:43 GMT

போன் பே வாடிக்கையாளர்கள் ரீசாஜ் செய்தால் இனிமேல் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் மையமாகி வரும் நிலையில், ஒவ்வொருவரும் தங்களின் வங்கி கணக்குகளில் இருந்து போன் பே மற்றும் கூகுள் பே வழியாக பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இதனிடையே போன் பே மூலமாக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து வருவதற்கு தற்போது சேவைக் கட்டணத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ரூ.50 முதல் 100க்குள் ரீசார்ஜ் செய்தால் சேவைக் கட்டணமாக ரூ.1 வசூல் செய்யப்படும் எனவும், ரூ.100க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.2 வசூல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source: News 7 Tamil

Image Courtesy:The Hans India

Tags:    

Similar News