இலவசம் கொடுத்த அதை பட்ஜெட்டில் காட்டுங்கள் - மாநில அரசுகளுக்கு நிதியமைச்சர் வேண்டுகோள்
இலவச திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலவச திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலவச திட்டங்கள் என்று சுமையை மற்றவர்கள் மீது மாநில அரசுகள் சுமத்த கூடாது என வலியுறுத்தினார்.
தேர்தல் இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகள் அதனால் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தாங்கள் ஒதுக்கிய பட்ஜெட்டில் இலவச திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
உதாரணமாக இலவச மின்சாரம் என்று அறிவிக்கும் போது அதற்கான செலவு இழப்பு போன்றவற்றை கணக்கிட்டு அத்தகைய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 7.4% அளவிற்கு வளர்ச்சிக் காணும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக எடுத்துக்காட்டினார்.
அடுத்த நிதியாண்டும் இதே அளவு வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியா பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியகமும், உலக வங்கியும் கணித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.