கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம்! உள்ளங்கை மணிக்கட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட சோகம்!

Six injured in blast at tea shop in Kerala, cops say no mystery behind incident

Update: 2021-12-22 13:00 GMT

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில், அணைக்காடு கிராமத்தில் உள்ள டீ கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவரின் உள்ளங்கை துண்டிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பேர் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் டீக்கடையில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் இதர பொருட்கள் உடைந்து சிதறியது.

காயங்கள் எதுவும் ஆபத்தானவை அல்ல, ஆனால் குண்டுவெடிப்பில் ஒரு நபரின் உள்ளங்கை கடுமையாக சேதமடைந்தது. சேதமடைந்த கடையின் உட்பகுதியில்  உள்ளங்கையின் ஒரு பகுதி காணப்பட்டது," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை .

அருகிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாறைகளை வெடிக்கப் பயன்படுத்திய ரசாயனப் பொருள் வெடித்ததே, சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும், விரிவான ஆய்வு மற்றும் அறிவியல் ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்ய முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய தகவல்

டீக்கடை உரிமையாளர் பஷீர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சன்னி சாக்கோ ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்கத்தில் சன்னியின் உள்ளங்கை மணிக்கட்டில் இருந்து துண்டிக்கப்பட்டது. அவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கீழ்வாய்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மர்மம் எதுவும் இல்லை என பத்தனம்திட்டா சிறப்பு பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. சன்னி என்பவர் பாறைகளை வெடிக்கச் செய்தார். மக்கள் கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது வெடிப்பு அப்பகுதியை உலுக்கியது. சன்னி மற்றும் டீக்கடை உரிமையாளர் பலத்த காயம் அடைந்தனர், மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர்" என பஞ்சாயத்து தலைவர் பிரமீளா வசந்த் மேத்யூ கூறினார்.






Tags:    

Similar News