மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு - முப்பது குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

மேற்கு வங்காளத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்தது. இந்த உணவை சாப்பிட்ட 30 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-12 01:00 GMT

மேற்கு வந்த மாநிலத்தில் பிர்பூம் மாவட்டத்தில் மயூரேஸ்வர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மதிய உணவு சாப்பிட்ட 30 குழந்தைகள் ஒவ்வொருவராக வாந்தி எடுக்கத் தொடங்கினர். பின்னர் அவர்கள் மயக்கம் அடைந்தனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மயக்கம் அடைந்த 30 குழந்தைகளையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் பகுதிக்கு விரைந்து சென்றனர்.


உணவை தயார் செய்த பள்ளி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாம்பு கிடந்த உணவை வழங்கியது ஏன்? அதற்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது பற்றி தகவல் தெரிந்த பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர். தலைமை ஆசிரியரை தாக்கினார். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர்.





 


Similar News