அடுத்த வாரம் இந்திய சந்தைக்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

Update: 2021-05-13 12:27 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இருந்தபோதிலும் நோய் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீண்டகால தீர்வாக அமைய வேண்டும் என்றால் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.




 


இருந்தபோதிலும் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 59 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விற்பனை செய்ய ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் மத்திய அரசிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்யாவுக்கு வந்தது. அதன் ஆய்வுகள் அனைத்தும் முடிந்துள்ளது.




 


இந்நிலையில், இந்திய மருந்து சந்தைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மருந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எளிதில் தடுப்பூசி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Similar News