ஐதராபத்தில் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியின் பரிசோதனை முடிந்தது.. விரைவில் சந்தைகளுக்கு அனுப்பப்படும்.!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் சுமார் 14 கோடிக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-05-14 13:53 GMT

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் சுமார் 14 கோடிக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், இந்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை விற்பனை செய்ய ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் மத்திய அரசிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் செய்திருந்தது.

இதனையடுத்து சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஐதராபாத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று பரிசோதனை செய்யப்பட்டது. விரைவில் தடுப்பூசி அனைத்து மருந்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என டாக்டர் ரெட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் தடுப்பூசி ஒரு சில நாட்களில் போடப்படும். கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News