இந்தியா வர இருக்கிற இலங்கை அதிபர் - பிரதமர் மோடியின் உதவியை நாடுகிறார்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வர இருக்கிறார்.

Update: 2022-10-08 05:25 GMT

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அன்னிய செலவாணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது. இது கிடையே பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்திடம் இலங்கை பேச்சு வார்த்தை நடத்தியது. இலங்கைக்கு 23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்தது சர்வதேச நிதியம்.


இதற்கான பூர்வாங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டது. ஆனால் இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு ஏற்கனவே வாங்கிய நாடுகளுடன் கடனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும், அந்த நாடுகளின் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியும் நிபந்தனை விதித்தது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. இதில் இந்த ஆண்டில் அதிக அளவாக இந்தியா 4 பில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு உதவி உள்ளது..


ஒட்டுமொத்தமாக அளவில் சீனா 52%, ஜப்பான் 19% மற்றும் மற்ற நாடுகளுக்கு 12% மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த கடனை மறுசீரமைப்பு செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வர திட்டமிட்டு உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்து இருக்கிறார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேசு வார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விசாரிப்பதற்கு டெல்லி வர விரும்புவதாக ஜப்பானில் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது நான் தெரிவித்தேன். பிரதமர் மோடி எப்போதும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நமது நெருக்கடியில் இந்தியாவின் உதவியை நாம் எப்பொழுதும் பாராட்டுகிறேன் நமது மறு கட்டமைப்பு முயற்சிக்க இந்தியா தொடர்ந்த ஆதரவளிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News