முத்தலக் போலவே "தலாக் இ ஹசன்" முறையையும் தடை செய்யுங்கள் - முஸ்லீம் பெண்கள் கோரிக்கை

Update: 2022-08-19 08:40 GMT

தலாக் இ ஹசன் என்பது, முத்தலாக் போன்ற மற்றொரு விவாகரத்து முறை ஆகும். முத்தலாக் முறையில், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி கணவன் - மனைவிக்கு இடையே விவாகரத்து மேற் கொள்ள முடியும். அதுவே தலாக் இ ஹசன் முறையில், 3 மாத காலத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு முறை `தலாக்' என்று கூறுவதன் மூலம் விவாகரத்து நடைமுறையை மேற்கொள்ளலாம். 

முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

முஸ்லிம்கள் பின்பற்றும் தலாக் இ ஹசன் விவாகரத்து முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலாக் இ ஹசன் முறையால் பல பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் கூறி, முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்தது போல அதையும் தடை செய்ய வேண்டும் என்று பெனாசீர் ஹீனா கூறியுள்ளார்.

Input From: Hindu Tamil

Similar News