எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.. மாநிலங்களுக்கு உச்சநீதிமனறம் பிறப்பித்த ஆணை.!
தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படுகிறது என்பது குறித்து வருகின்ற 10 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில், ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வெளியிட உச்சநீதிமன்றம் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படுகிறது என்பது குறித்து வருகின்ற 10 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், ஜூலை 31ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.