பிரதமரின் சுதந்திர தின உரையில் வரப்போகும் ஆச்சர்யங்கள்

பிரதமரின் சுதந்திர தின உலையில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-08-13 06:22 GMT

பிரதமரின் சுதந்திர தின உலையில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றப் போகும் உரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து பிரதமர் உறுதி அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க'வின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக மூன்று அம்ச திட்டங்கள் பற்றிய மோடி தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி 65 நிமிடம் உரையாற்ற போகிறார். அதற்கான ஒத்ஹகை டெல்லி செங்கோட்டையில் நடந்தது இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த உரை உணர்வு பூர்வமாக இருக்கும் எனவும் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்சினைகள் அதற்கான நிவாரணங்கள் தொகுப்பு வழங்குவது குறித்து உறுதி அளிப்பது, சீனாவால் நாடு எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை முன்னிறுத்தி இருக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மேலும் ஏழை எளிய மக்கள் நேரடியாக பயன்படுத்தும் திட்டங்களை அதிகரிக்கவும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புது வேகத்திலும் செயல்படுவோம் என பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Source - Dinamalar

Similar News