பிரதமர் மோடி சென்றபோது ஜம்முகாஷ்மீரில் வெடித்த குண்டு - பயங்கரவாதிகளின் சதிச்செயலா?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்ற நிலையில், பிஷ்னா என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
தேசிய உள்ளாட்சி அமைப்பு நாளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு இன்று சென்றார். அங்கு 20 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கு மத்தியில் கிராம சபைக் கூட்டங்களில் காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றுவதாக இருந்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் பிராந்தியங்கள் இடையில் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 3,100 கோடி ரூபாய் மதிப்பிலான பனிஹல் காசிகுண்ட் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஷ்னாவில் உள்ள லாலியன் கிராமத்தில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் குண்டு வெடித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். பிரதமர் மோடி வருகைக்கு முன்னரே குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
Source: News 7 Tamil
Image Courtesy:NDTV