தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு.. எச்சரிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் என்று எண்ணியிருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்தும், உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கூறியுள்ளார். கேரளா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுடன் மத்திய அரசு இணைப்பில் உள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில் 2வது அலை இன்னும் மீளவில்லை எனக் கூறினார்.