மாணவர்களை பாட்டு பாடி மதம் மாற்ற முயற்சித்த ஆசிரியர் கைது
மாணவர்களை மதம் மாற்றம் முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
மாணவர்களை மதம் மாற்றம் முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரித்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் வஜ்ருதீன் என்ற உதவி ஆசிரியர் உருது மொழியில் இஸ்லாமிய பிரார்த்தனை பாடல்களை பாடி மாணவர்களை பாட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு புகார் அளித்ததை தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது ஆசிரியர் வஜ்ருதீன் இஸ்லாமிய மத போதனை பாடல்களை மாணவர்கள் இடையே பாடியதுடன் அவரை பாட வைத்ததாகவும், அவர்களை மதம் மாற்ற முயற்சித்ததாகவும் புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளோம்' எனவும் போலீசார் தெரிவித்தனர்.