தெலங்கானாவில் குளியலறையில் தனிமைப்படுத்திய சுகாதாரப் பணியாளர்.!

தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அதே கிராமத்தில் சுகாதார பணியாளராக உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் மனைவி, மகளும் ஒரு அறையில் வசித்து வந்த நிலையில், தன்னுடைய வீட்டின் குளியல் அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

Update: 2021-05-15 07:24 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளதால், பல லட்சம் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே நோயாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் தங்களை அர்பணித்துக்கொண்டு 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.

அது போன்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது வழக்கம். அவர்களை அரசு தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், மைலாரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அதே கிராமத்தில் சுகாதார பணியாளராக உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் மனைவி, மகளும் ஒரு அறையில் வசித்து வந்த நிலையில், தன்னுடைய வீட்டின் குளியல் அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது பற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு, அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அனைவருக்கும் உழைத்து வரும் சுகாதார பணியாளர்களுக்கே இந்த நிலைமையா என்று பொதுமக்கள் பேசும் நிலை உருவாகியுள்ளது.

Similar News