தெலங்கானா: வேகமாக செக் போஸ்ட் கடக்க முயன்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு.!
தெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு கம்பியில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு கம்பியில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், செரியல் மாவட்டம், ஜன்னாரம் பகுதியை நோக்கி அதிவேகமாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை வனத்துறை ஊழியர் இறக்கியுள்ளார்.
வேகமாக வரும் இளைஞர்ளை பார்த்து வாகனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் அதிவேகமாக வந்த இளைஞர்கள் தடுப்பு கம்பியில் மோதி தூக்கி வீசப்பட்டனர். அதில் ஒரு இளைஞர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.