ட்ராக்கில் ஒளிந்துகொண்டு சென்ற பயங்கவாதிகள் - அதிரடிப்படையின் சாமர்த்தியத்தால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.;

Update: 2022-12-29 08:13 GMT

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்முவின் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற ட்ரக் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினரை பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும் அந்த ட்ரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Source - Polimer

Similar News