இந்தியாவில் மிகப்பெரிய மதமாற்றம்! உ.பி.யில் மதகுரு அதிரடி கைது!
உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அந்த குழுக்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பல்வேறு வகையில் நிதியுதவிகளை பெற்று காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் மிகப்பெரிய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணை பின்னணியில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த அமைப்புகளுக்கு பிரிட்டனை சேர்ந்த அல் பல்லா அறக்கட்டளையின் மூலமாக 57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர்கள் கைதாகியுள்ளனர். இந்த வரிசையில் உத்தர பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது.
இந்த மதகுருவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பயங்கரவாத தடுப்பு படை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. சித்திக் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில் மிகப்பெரிய அளவில் மதமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதற்காக பல கோடி அளவில் வெளிநாட்டு நிதியும் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar