கோதுமை வரியை அதிரடியாக குறைக்கபோகும் மத்திய அரசு

கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீத குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2022-08-09 11:30 GMT

கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீத குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் கோதுமையின் விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, மேலும் மொத்த விற்பனையாளர்களிடம் இருக்கும் கோதுமை இருப்புக்கும் வரம்புகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


உக்ரைன் போர் மற்றும் கடும் வெப்பம் காரணமாக கடந்த மே மாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.


உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இருப்பினும் கோதுமையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது இறக்குமதி வரியை 40 சதவிகிதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Polimer

Similar News