மலை யுத்த அனுபவங்களில் உலகின் நம்பர்.1 இந்திய ராணுவம்தான் - அமெரிக்க ஆய்வு மையம் மற்றும் சீன ஊடகங்கள் தகவல்.!
மலை யுத்த அனுபவங்களில் உலகின் நம்பர்.1 இந்திய ராணுவம்தான் - அமெரிக்க ஆய்வு மையம் மற்றும் சீன ஊடகங்கள் தகவல்.!
இந்திய இராணுவத்தில் 12 இலட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவெனில் 12 பிரிவுகளில் 2,00,000 க்கும் மேற்பட்ட வீரர்களை உயரமான மலைப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் என்பதுதான்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்திய ராணுவத் திறன் குறித்து ஆய்வு செய்து கூறுகையில் "ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா இந்தியாவைவிட எண்ணிக்கையில் கூடுதல் பலம் பெற்றதாக உள்ளது, என்றாலும் மலைப்பகுதிகளில் இந்தியாவின் திறன் மற்றும் வலிமை, அனுபவம் மிக சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது.
அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல நவீன ஆயுதம் இதழின் மூத்த ஆசிரியரும் சீன நிபுணருமான ஹுவாங் குயோஜி எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் கூறுகையில் " தற்போது, பீடபூமி மற்றும் மலை பிரதேசங்களில் உலகின் மிகப்பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நாடு இந்தியா தான், அமெரிக்காவோ, ரஷ்யாவோ,சீனாவோ அல்லது எந்த ஐரோப்பிய நாடும் அல்ல எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய இராணுவத்தின் மலை யுத்த வலிமையின் பிரதான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ளது மற்றும் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி வரை குறைகிறது .
சியாச்சினில் கடல் மட்டத்திலிருந்து 6,749 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் சுமார் 6,000 முதல் 7,000 வீரர்கள் எதையும் தாக்குப்பிடிக்கும் திறனுடன் உள்ளனர்.