ஒன்றரை ஆண்டுகளில் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான குடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கிய பிரதமரின் திட்டம்.!
ஒன்றரை ஆண்டுகளில் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான குடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கிய பிரதமரின் திட்டம்.!
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டது முதல், நாட்டில் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாகத் தங்களது வீடுகளிலேயே குடிதண்ணீர் கிடைப்பதால் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை மிகவும் சுலபமாகி இருப்பதாக அவர் மேலும் கூறினார். அசுத்தமான தண்ணீரால் ஏழைக் குடும்பங்களிடையே நிலவிவந்த காலரா, டைஃபாய்டு, மூளையில் ஏற்படும் வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள் குறைந்திருப்பது இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய பயன் என்று அவர் தெரிவித்தார்.
வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள், நீரை தேடி வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார். தற்போது இந்த திட்டங்களின் வாயிலாக தண்ணீர் பஞ்சம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு துரித வளர்ச்சியும் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சுத்தமான குடிநீர் கிராமங்களை அடையும்போது, இங்கு வசிக்கும் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படுவதுடன் அவர்களது உடல் மற்றும் மன நலனும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஒருவருக்கு சுதந்திரமாக முடிவு எடுப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து, உங்கள் கிராம வளர்ச்சிக்காக செயல்படும்போது அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரது தன்னம்பிக்கையையும் அது உயர்த்தும் என்று அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவிற்கான வலிமை தற்சார்பு கிராமங்களில் இருந்து கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எரிவாயு சிலிண்டர், மின்சார இணைப்பு, சூரிய மின் சக்தித் திட்டம், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் விளையும் தன்மையற்ற நிலங்களில் நிறைவடைந்துள்ள நீர்ப் பாசனத் திட்டம் மற்றும் சூரிய மின் சக்தித் திட்டங்கள் ஆகியவை மேலும் பயனளிக்கும் என்று கூறினார்.