யாருமே இதை எதிர்பார்க்கல! 78 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி படகு மீண்டும் பயன்பாட்டில்?

Update: 2022-08-25 01:46 GMT

கடந்த 1944-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டம்பர்டன் கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட நீராவி படகான 'பி.எஸ்.போபால்', கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தால் பயிற்சி கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2019-ஆம் ஆண்டு பயிற்சி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு பாரம்பரியமிக்க இந்த படகை புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முடிவு செய்ததாக அதன் தலைவர் வினித் குமார் தெரிவித்தார். இதையடுத்து, மோசமாக சிதிலம் அடைந்திருந்த இந்த படகை நீண்ட கால ஒப்பந்தத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

ஒப்பந்த காலம் முழுவதும் கொல்கத்தா துறைமுகத்தின் பொறுப்பிலேயே படகு இருக்கும் வகையில் வெளிப்படையான ஏல முறையில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின் படி, கரை ஓரத்தில் பி.எஸ்.போபால் படகு நிறுத்தி வைக்கப்பட்டு, கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருக்கும்.

படகை‌ புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் சோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய துணை கண்டத்தில் முதன் முறையாக இது போன்ற புதுப்பிக்கப்பட்ட படகை, அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வினித் குமார் கூறினார். இந்தப் படகு தற்போது இயக்க நிலையில் இல்லாத போதும், அதன் அடிப்படை அமைப்பை மாற்றாமல், 1944-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட போது இருந்த உணர்வை பயணிகளுக்கு வழங்கும் வகையில் ஆற்றில் இந்த படகு நகர்வதற்கு ஏதுவாக பிரதான என்ஜின்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.

Input From: LIve MInt

Similar News