இந்தியாவில் தயவில் 61 நாடுகள் - பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி பாரதம் படைத்த சாதனை!

Update: 2022-08-02 06:39 GMT

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 12,815 கோடி அளவுக்கு பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 61 நாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் சில உத்திகள் காரணமாக அந்த நாடுகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடிக்கும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடிக்கும் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடிக்கும் பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரை ரூ.1,387 கோடி அளவிற்கு பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமான சேவையை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதே போல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்க முடியும்.

சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், கனடா, சீனா, சிரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

Input From: LIvemint

Similar News