நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - 16 மசோதாக்களை அதிரடியாக தாக்கல் செய்யப்போகும் மத்திய அரசு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் துறையில் சுமார் 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.

Update: 2022-12-08 03:00 GMT

சர்வதேச சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தொடரின் போது 16 மசோதாக்கள் மத்திய அரசு தாக்கல் செய்ய முடிவெடுத்து இருக்கிறது. அதை வேளையில் பணவீக்கம், 10% இட ஒதுக்கீடு, சீனவுடன் கிழக்கு லடாக் எல்லை பிரச்சினை உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை எழுப்பி மத்திய அரசுக்கு நெடுகடி கொடுக்க எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.


கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. வரும் 29 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் தொடரின் போது மக்களவை மாநிலங்களவை ஆகியவை 17 அமர்வுகளை நடத்த உள்ளன. புதிய நாடாளுமன்றம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் இவை நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தேசிய பல் மருத்துவமனை ஆணை மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது.குறிப்பாக கூட்ட தொடரின் போது 16 மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய பல் மருத்துவ ஆணையத்தை அமைக்கவும், பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கவும் அதே மசோதா வழிவகை செய்கிறது. தேசிய செவிலியர் ஆணைய மசோதா கண்டோன்மென்ட் கண்டோன்மென்ட் மசோதா உள்ளிட்ட பற்றி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.


கண்டோன்மென்ட் பகுதியில் நிர்வாகம் தடைகள் நடவடிக்கைகளை மேம்படுத்த ஜனநாயக நடைமுறைகளையும் வலுப்படுத்தவும், கண்டோன்மென்ட் மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு ஆளுநர்களால் வழங்கப்பட்ட நிலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான மசோதாவையும் குளிர்கால கூட்ட தொடரின் போது மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது. அந்த நிலங்களின் மீது அரசின் உரிமையை அதிகரிப்பதும் மசோதாவின் முக்கிய நோக்கம் ஆகும். நாட்டின் வன பாதுகாப்பு அதிகரிக்கும் நோக்கில் பணம் இல்லாத பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News