10, 12வது வகுப்புகளுக்கு இறுதி தேர்வு கிடையாது.. மேற்குவங்க முதல்வர்.!

10, 12வது வகுப்புகளுக்கு இறுதி தேர்வு கிடையாது.. மேற்குவங்க முதல்வர்.!

Update: 2020-11-11 19:50 GMT


இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கல்வி நிலையங்கள் முடங்கியது. இந்த கல்வி ஆண்டில் பல்வேறு மாநில அரசுகள் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளித்தது.


இதனிடையே தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை படிப்படியாக மீண்டும் திறக்க மத்திய கல்வி அமைச்சகம் அனுமதித்த போதிலும், கொரோனாவால் தமிழகம் இன்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 10வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதன்படி மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு (2020 -2021) 10வது 12வது படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்றும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பள்ளிகள் மீண்டும் திறப்பது பற்றி இந்த மாதம் கடைசியில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Similar News