இனி தொலைபேசி மூலம் போலி அழைப்புகள், மோசடி நடக்காது - அதிரடியாக புதிய சட்ட திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு

இனி போலி அழைப்புகள் மற்றும் மோசடிகள் நடைபெறாதவாறு மத்திய அரசு சட்ட சீர்திருத்தம் கொண்டுவர இருக்கிறது.

Update: 2022-09-24 09:25 GMT

இனி போலி அழைப்புகள் மற்றும் மோசடிகள் நடைபெறாதவாறு மத்திய அரசு சட்ட சீர்திருத்தம் கொண்டுவர இருக்கிறது.

போலி அழைப்புகள் மோசடி குறும் தகவலில் இருந்து நிவாரணம் அளிக்கிற வகையில் சட்ட திருத்தம் செய்து போகிறது மத்திய அரசு. மொபைல் போன் பயனாளர்களுக்கு போலி அழைப்புகள், மோசடி செயல்களில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கின்ற வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா மூலம் போலியான அழைப்புகள் மோசடி குறித்த தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிவதுடன் பயனாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தெரிவித்தார்.

இதற்கான வரைவு மசோதா பொதுமக்களின் கருத்துக்காக சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு 10 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரும் என தெரிவித்தார் மத்திய அமைச்சர்.



Source - Polimer News

Similar News