கோவிலுக்குள் மாமிசத்தை வீசி, ரத்தத்தால் அசுத்தம் செய்து அட்டூழியம்.!
கோவிலுக்குள் மாமிசத்தை வீசி, ரத்தத்தால் அசுத்தம் செய்து அட்டூழியம்.!
ஆந்திரப் பிரதேசத்தில் சென்ற மாதம் அனுமன் சிலை உடைப்பு, புகழ்பெற்ற அந்தர்வேதி நரசிம்மர் கோயில் தேர் எரிப்பு உள்ளிட்ட பல இந்து விரோத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இது இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கிறிஸ்தவரான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு அளித்திருக்கும் சுதந்திரம் தான் இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தொடர் தாக்குதல்களைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க மற்றும் வி.ஹெச்.பி போன்ற இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. சென்ற மாதம் தான் அப்படி என்றால் இந்த மாதமும் இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் பிரகாசம் மாவட்டத்தில் குறிச்சேடு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் இறைச்சி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Andhra Pradesh.
— DharmaRakshak (@oldhandhyd) December 23, 2020
Kurichedu.
Temple desecrated with slaughtered meat and blood. Another temple wall broken.
Fed up with official inaction, temple in charge climbs cell tower. Officials rush to the spot and initiate action. pic.twitter.com/EVC0s92aqZ
சமூக ஊடகங்களில் மட்டுமே வெளியாகி உள்ள இந்த சம்பவத்தில், மாற்றுஅ மதத்தவர்கள் பிரகாசம் ஜில்லாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்குள் இறைச்சியை வீசியதோடு, கோவில் சுவரை ரத்தத்தால் அசுத்தப்படுத்தி, சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து உள்ளூர் காவல் துறையினரிடம் புகார் அளித்த போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.