திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி.!
டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டவர் தற்போது திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அம்மாநிலத்தில் முதல் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவில் குறையத்தொடங்கியுள்ள நிலையில் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் ஒன்று, இரண்டு பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் 40க்கும் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில முதன் முதலில் தொற்று திருப்பதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆள்ள நானி உறுதிப்படுத்தினார்.
டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டவர் தற்போது திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அம்மாநிலத்தில் முதல் தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் தொற்று பரவாமல் இருப்பதற்காக அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.