தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக பன்வாரிலால் புரோகித் பிரதமரை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-10 02:10 GMT

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஆளுநர் மாநிலம் முழுவதும் அதிரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். மக்கள் நலத்திட்டங்கள் எப்படி நடைபெறுகிறது என ஒவ்வொரு மாவட்டத்திற்கு நேரில் சென்று கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச உள்ளார். இதுற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.இன்றைய பிரதமர் சந்திப்பில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக பன்வாரிலால் புரோகித் பிரதமரை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News