பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் ரூ.4,800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா

Update: 2022-05-10 11:47 GMT

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் இன்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட டொயோட்டா குழும நிறுவனங்கள் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.4,800 கோடியை கர்நாடகாவில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் டொயோட்டா குழும் சார்பில் ரூ.4,800 கோடி முதலீடு செய்ய உள்ள தகவலை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: டொயோட்டா நிறுவனம் கர்நாடகாவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அதன்படி அந்த குழுமம் ரூ.4,800 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

மாநிலத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்கான வளர்ச்சியை ஏற்படுத்த நினைக்கும் அரசின் முயற்சிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றொரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News