80 ஆண்டுகளாக மின்வசதி கிடைக்காமல் மோடி அரசால் மின்சாரம் கிடைத்த மலைகிராமம்

80 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சாரம் கிடைத்துள்ளதால் திரிபுரா மலை கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-08-12 13:39 GMT

80 ஆண்டுகளுக்குப் பின்பு மின்சாரம் கிடைத்துள்ளதால் திரிபுரா மலை கிராமங்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டின் நெருங்கும் வேலையிலும் திரிபுராவில் உள்ள மலை கிராமங்கள் பலருக்கும் மின்சாரம் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த கிராமங்களுக்கு சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி வாயிலான மின்சார வசதி செய்வதற்கான திட்டம் கடந்த ஆண்டு முதல் துவங்கியது, இதனை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 30 அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இதன்படி கோவாய் மாவட்டத்தில் உள்ள சர்கிபாரா உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது இதனால் இந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுவரை மண்ணெண்ணெய் விளக்கு அல்லது பேட்டரி வாயிலாக இயங்கும் விளக்குகளை பயன்படுத்தி வந்த அவர்கள். தற்பொழுது மின்சாரத்தினால் விளக்குகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர்

இதனால் மாணவர்கள் படிக்க முடியும் என்றும் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை சுலபமாக செய்ய முடிகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதுவரை 12 வட்டாரங்களில் 2930 தெரு விளக்குகள் 239 கிராமச்சந்தைகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.


Source - Dinamalar

Similar News