மங்களூரு குண்டுவெடிப்பில் மேலும் சிக்கிய இரு ஐ.எஸ் தொடர்பு தீவிரவாதிகள் - நீளும் நெட்ஒர்க்
மங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிதாக மேலும் இரு குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.;
மங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிதாக மேலும் இரு குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் கொண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக தீவிரவாதி முகமது ஷாரிக் பலத்த காயங்களுடன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த கர்நாடக போலீசார் இது குறித்து கூறியதாவது, 'மும்பை தாரிக் குற்றவாளியாக அறிவித்த என்.ஐ.ஏ புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளனர். சிகிச்சை பெற்று ஓரளவுக்கு குணமடைந்துள்ளதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது' என்றார்கள்.
மேலும், முகமது ஷாரிக்குடன் சிவமொக்கா பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான மாஸ் அகமது, சையது யாசின் ஆகியோரும் முக்கிய குற்றவாளியாக சேர்த்து விசாரித்துள்ளனர். இவர்கள் மூவரும் நேரடியாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் தொடர்புடன் இருப்பது தெரிய வந்துள்ளது எனவும் தகவல் தெரிவித்தனர்.