உதயசூரியன் சின்னம் கேட்ட உத்தவ் தாக்கரே அணியினர் - கிடைத்தது என்ன சின்னம் தெரியுமா?
Uddhav Thackeray's teammates asked for Udayasuriyan symbol - do you know what symbol they got?
உதயசூரியன் சின்னத்தை அளிக்கும்படி கேட்ட உத்தவ் தாக்கரேயை தலைமையிலான சிவசேனா அணிக்கு ஜோதி சின்னம் கிடைத்துள்ளது.
தற்பொழுது மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சி திருப்பமாக நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் வில் அன்பு சின்னத்தை முடக்கியது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே அணியினர் தங்களுக்கு தற்காலிக சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துடன் வலியுறுத்தி உள்ளனர். அதில் திரிசூலம் அல்லது உதயசூரியன் அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சின்னங்களும் ஒதுக்காவிட்டால் தீபம் சின்னத்தை ஒதுக்கும்படி உத்தவ் தாக்கரே அணியினர் கோரி உள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணியினருக்கு 'சுடர் ஜோதி' சின்னத்தை ஒதுக்கியுள்ளனர்.