பத்து முக்கிய துறைகளுக்கு ரூ 145980 கோடி உற்பத்தி சார்ந்த உதவித் தொகை வழங்கும் மத்திய அரசு.!
பத்து முக்கிய துறைகளுக்கு ரூ 145980 கோடி உற்பத்தி சார்ந்த உதவித் தொகை வழங்கும் மத்திய அரசு.!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடையும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பத்து துறைகளின் விவரங்களை அடுத்து பார்க்கலாம்.
- மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம் தயாரிப்புக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 18,100 கோடியாகும்.
- மின்னணு/தொழில்நுட்பப் பொருட்கள் உற்பத்திக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 5000 கோடியாகும்.
- வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 57042 கோடியாகும்.
- மருந்துகள் உற்பத்திக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 15000 கோடியாகும்.
- தொலைதொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்கள் தயாரிப்புக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 12195 கோடியாகும்.
- ஜவுளிப் பொருட்களில் மனிதர்களால் செய்யப்படும் இழைகள் பிரிவு மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 10683 கோடியாகும்.
- உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு ஐந்து வருட காலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிதி ரூ 10900 கோடியாகும்.