நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

Update: 2022-06-04 02:53 GMT
நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

உலக சைக்கிள் தினமான நேற்று, நாடு முழுவதும் சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மக்கள் விடுபடவும், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் பேரணி நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதே போன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து நேற்று (ஜூன் 2) காலை சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 750 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News