பல்கலைக்கழகங்கள் கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
இந்தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்பு கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்க தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பல்கலைக்கழகங்கள் கருத்து பரிமாற்றத்துக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது. எப்போதுமே கருத்துகள், விவாதங்கள் மூலமாக ஒரு சித்தாந்தம் முன்னேறுகிறது. ஒவ்வொரு இளைஞரும் தங்கள் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியா அமைதியை விரும்புகிறது.
மேலும், நமது இந்தியா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையேயும் நட்பை கொண்டுள்ளது. இந்தியாவுக்கு என்று ஒரு பாதுகாப்புக் கொள்கை இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அது வெளியுறவுக் கொள்கையின் நிழலாகவே இருந்திருக்கம். ஆனால் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா பல்வேறு விஷயங்களில் சாதனை படைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை பாராட்டத்தக்கது. அக்கொள்கையை யாரும் எதிர்க்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Vikatan