இந்தியாவின் UPIயை வரவேற்கும் 40 உலக நாடுகள்.. அதனாலதான் பிரதமர் மோடி மாஸ்..

இந்தியாவின் UPIயை வரவேற்கும் 40 உலக நாடுகள்

Update: 2023-06-15 05:33 GMT

உலகத்தில் இருக்கும் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவில் தொழில் நுட்ப பரிமாற்றத்தை எண்ணி தற்போது வியந்து வருகிறார்கள். குறிப்பாக இத்தகைய தொழில்நுட்பத்தை தங்களுடைய நாடுகளிலும் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில் இந்தியாவின் தொழில்நுட்ப பரிமாற்றம் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் UPIயின் மூலம் பணப் பரிமாற்றம் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் இருக்கும் 142 கோடி மக்களின் பெரும்பாலானவர்கள் இந்த யுபிஐ மூலமாக பணம் பரிவர்த்தனையும் மேற் கொள்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இத்தகைய UPI பரிவர்த்தனைகள் மிகவும் சுலபமாக இருப்பதன் காரணமாக தங்களுடைய நாடுகளிலும் UPIயை பயன்படுத்திக் கொள்ள பல்வேறு உலக நாடுகள் விருப்பம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக 40க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவின் யு. பி.ஐ பயன்படுத்திக் கொள்ள முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.


இன்று இந்தியாவில் மிகச் சிறிய சாதாரண கடைகளில் இருந்து பெரிய, பெரிய கடைகள் வரை இந்த யுபிஐ பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் இத்தகைய வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியின் கீழ் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News