பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,68,313 சமையல் எரிவாயு இணைப்புகள் - மக்களிடம் சென்று சேர வேண்டிய திட்டம்!

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,68,313 சமையல் எரிவாயு இணைப்புகள்

Update: 2021-12-03 00:45 GMT

மக்ககளவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பிரதமரின் உஜ்வாலா திட்டம் குறித்த  தகவல்களை அளித்தார்.

அதில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மேலதிகமாக, 1 கோடி டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்புகளை நாடு முழுவதும் வழங்குவதற்காக உஜ்வாலா 2.0-ஐ 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

உஜ்வாலா 2.0-ன் கீழ், டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்பு, இலவச முதல் உருளை மற்றும் அடுப்பு ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. உஜ்வாலா 2.0-ன் கீழ் 2021 நவம்பர் 28 வரை நாடு முழுவதும் 78.98 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 1,68,313 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும், நாட்டில் உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தேசிய உயிரி எரிபொருள்கள் கொள்கை-2018-ஐ 4 ஜூன் 2018 அன்று அரசு வெளியிட்டது.

2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் எத்தனாலை 20% கலப்பதையும், 2030-ம் ஆண்டுக்குள் டீசலில் 5% பயோடீசலைக் கலப்பதையும் தேசிய உயிரி எரிபொருள்கள் கொள்கை குறிக்கோளாகக் கருதுகிறது.

உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, ஆராய்ச்சி, ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.

எத்தனால் 85 எரிபொருள் வரை பயன்படுத்தக்கூடிய நெகிழ்வுத்தன்மை மிக்க எஞ்சின் மற்றும் இதர எஞ்சின்கள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவை ஆகும். இதன் மூலம் நாட்டில் உயிரி எரிபொருள்களை பயன்படுத்தும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.




Tags:    

Similar News