உத்தரபிரதேசம் இப்போது எக்ஸ்பிரஸ் பிரதேசமாக மாறிவிட்டது - பாராட்டிய பிரதமர் மோடி.!

உத்தரபிரதேசம் இப்போது எக்ஸ்பிரஸ் பிரதேசமாக மாறிவிட்டது - பாராட்டிய பிரதமர் மோடி.!

Update: 2020-12-01 11:04 GMT

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசி -  பிரயாக்ராஜ் ஆறுவழிச்சாலை சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அப்போது அவர் காசிக்கும் பிரயாகராஜுக்கும் இடையில் இந்த ஆறுவழிச்சாலை மக்கள் பயணிப்பதை எளிதாக்கியுள்ளது.  

கன்வர் யாத்திரையின் போது கன்வாரியாக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இத்திட்டத்தால்  முடிவுக்கு வந்துவிடும்  கும்பமேளாவின் போது இதன் பயன்கள் முழுமையாக கிடைக்கும் என்று கூறினார். 

மேலும், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது.

விளைபொருள்கள் சேமிப்பு வசதிகள் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. 

சுவாமிநாதன் கமிஷனின் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதி விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முன்பெல்லாம் அரசின் முடிவுகள் எதிர்க்கப்பட்டன. 

ஆனால் இப்போது வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன என்றார். 

மேலும் இப்போது இது பழைய உத்தரப் பிரதேசம் இல்லை, மிகவும் நவீனமன வகையிலும், அதே சமயம் வேலைவாய்ப்புகளை அள்ளித்தருகின்ற வகையில் இங்கு ஏராளமான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்கள் தொடங்கப்பட்டு முழு வேச்சில் நடைபெறுகின்றன. 

உத்தரபிரதேசம் இப்போது எக்ஸ்பிரஸ் பிரதேசமாக மாறி உள்ளது, சுதந்திரத்துக்குப் பின் எப்போதுமில்லாத வகையில் இங்கு மின்னல் வேகத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன,  உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரை நான் வாழ்த்துகிறேன் என்றார் பிரதமர். 
 

Similar News