புலி பாய்ச்சலில் இந்தியா! தடுப்பூசி செலுத்துவதில் அடுத்த வாரத்தில்100 கோடியை தொடுகிறது !

Update: 2021-10-14 04:53 GMT

'நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில்100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

தடுப்பூசி செலுத்துவது குறித்து  மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி " கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை மொத்தம் 96 கோடியே 70 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது; 30சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை படைக்கும்" என்று அவர் கூறினார். 

பல நாடுகள் தன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில்  சிரமப்படும் நிலையில், இந்திய தன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் புலி பாய்ச்சல் நடத்திவருகிறது. 

Dinamalar 

Image : Buisness Standard

Tags:    

Similar News