கர்நாடக சிறைச்சாலையில் திறக்கப்பட்ட வீர சாவர்க்கர் படம்

கர்நாடகாவில் உள்ள சிறையில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-30 06:11 GMT

கர்நாடகாவில் உள்ள சிறையில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டுள்ளது.

பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவக்கரின் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் வீரசாமர் புகைப்படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறும் போது, 'வீர சாவக்கர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். இந்து மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். இந்த சிறையில் கடந்த 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை அடைக்கப்பட்டிருந்தார். சாவக்கர் இந்த சிறையில் 99 நாட்கள் இருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது புகைப்படம் ஹிண்டல்கா சிறைச்சாலையில் திறக்கப்பட்டுள்ளது' என கூறினார்.



Source - The Tamil Hindu

Similar News