காசநோய் இல்லாத இந்தியா ! துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை !
அனைவரின் கூட்டு முயற்சியே வருகின்ற 2025ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.;
அனைவரின் கூட்டு முயற்சியே வருகின்ற 2025ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சபாநயகர் ஓம்பிர்லாவுடன் இணைந்து பாராளுமன்றத்தில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: காசநோய் இல்லாத இந்தியா என்பது இந்தியாவின் நீண்டகால நோக்கம். அது இன்னும் முற்றுப்பெறாமல் இருக்கிறது.
இதற்கு எம்.பி.க்கள், அவரவர் தொகுதியில் காசநோயை ஒழிப்பதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டும். 2025ல் காசநோயை ஒழிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கத்தை, அனைத்து எம்.பி.க்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
இந்தியாவில் காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலமாக 6 கோடியே 30 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மனிதர்களின் ஆயுட்காலமும் உயர்ந்துள்ளது. எனவே அனைவரும் கூட்டுசேர்ந்து 2025ல் காசநோய் இல்லாத இந்தியாவாக மாற்ற செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2820391