கேரளா: தாயிடம் தவறாக நடந்த நபரை கோடாரியால் வெட்டி சாய்த்த இரண்டு சிறுமிகள்!

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் தாயிடம் தவறாக நடந்து கொண்ட முகமது என்ற முதியவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, அவரின் சடலத்தை துண்டு, துண்டு வெட்டி பாலடைந்த கிணற்றில் வீசியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2021-12-31 03:08 GMT

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் தாயிடம் தவறாக நடந்து கொண்ட முகமது என்ற முதியவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, அவரின் சடலத்தை துண்டு, துண்டு வெட்டி பாலடைந்த கிணற்றில் வீசியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் காவல் நிலையத்திற்கு 15 மற்றும் 16 மதிக்கத்தக்க இரண்டு மகளுடன் ஒரு தாய் வந்துள்ளார். அப்போது போலீசாரிடம் நாங்கள் ஒருவரை கொலை செய்து விட்டோம் எங்களை கைது செய்யுங்கள் என கூறினர். இதனால் அதிச்சியடைந்த போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர். அப்போது சிறுமிகள் மற்றும் தாய் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இரண்டு பேரும் சகோதரிகள், இவர் எங்களின் அம்மா, நாங்கள் மூவரும் அம்பலவயல் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரரான முகமது 68 என்ற முதியவர் வசித்து வந்தார். அவரது வீட்டில்தான் நாங்களும் வாடகைக்கு வசித்து வருகிறோம்.


இதனிடையே நானும், எனது சகோதரியும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எனது அம்மா அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிபோய் வீட்டில் பார்த்தபோது முதியவரான முகமது எங்களின் அம்மாவிடம் தவறாக நடப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனால் எங்கள் கையில் இருந்த கோடாரியால் தலை மீது தாக்கினோம். சம்பவ இடத்திலேயே முகமது உயிரிழந்துவிட்டார். இதனிடையே முகமதுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிந்தால் எங்களை கொன்றுவிடுவார்கள். இதனால் முதியவரின் உடலை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டி சாக்குபையில் கட்டி அருகாமையில் இருந்த பாலடைந்த கிணற்றில் போட்டுவிட்டோம். இதன் பின்னர் வீட்டிற்கு வந்தபோது எங்களுக்கு மன உளைச்சலாக இருந்தது. இதனால் வேறு வழியின்றி நாங்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தோம் என்றனர். இதனை கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News