வேளாண்சட்டம் வாபஸ்: #WeStandWith மோடிஜி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்!

இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்சட்டங்களை சிலர் மட்டும் எதிர்த்து வந்த நிலையில், அவர்களின் மனதையும் புரிந்து கொண்ட பிரதமர் மோடி அச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

Update: 2021-11-21 05:57 GMT

இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்சட்டங்களை சிலர் மட்டும் எதிர்த்து வந்த நிலையில், அவர்களின் மனதையும் புரிந்து கொண்ட பிரதமர் மோடி அச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 


பிரதமர் மோடி அறிவித்த பின்னர் அவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் ஒட்டுமொத்த இந்தியர்களும் அவர் பின்னால் நிற்பதாக ட்விட்டரில் ஹாஸ்டேக் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள விவசாயிகளை இடைத்தரர்களிடம் இருந்து பாதுகாக்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் சில விஷக்கிருமிகள் வேண்டும் என்று டெல்லியில் ஊடுருவி நாட்டிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தது. இதனால் சில அப்பாவி விவசாயிகளும் பலிகடா ஆக்கப்பட்டனர். அது போன்றவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.


இதன் பின்னர் பிரதமர் மோடி பின்னால் ஒட்டு மொத்த மக்களும் இருப்பதாக சமூக வலைதளமான ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News