மத்திய அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கைப்பற்றப்படலாம்: தயார் நிலையில் இந்திய ராணுவம்!
மத்திய அரசு உத்தரவிட்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறும் பணியை முடிக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று வடக்கு மண்டல ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதை செய்து முடிக்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 160 பயங்கரவாதிகள் ஊடுருவும் நோக்கில் உள்ளனர். அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக உள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், அவர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்றுவிடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
பாகிஸ்தான் போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்துகிறது. பல பகுதிகளில் சரக்குகளை நாங்கள் பிடித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளாக மாறும் இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்து வருகிறது என்றார்.
Input From: India Today