இந்திய இறையாண்மையை இனி தவறாக சித்தரித்தால் தடை செய்வோம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!
இந்திய இறையாண்மையை இனி தவறாக சித்தரித்தால் தடை செய்வோம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!
ஜம்மு-காஷ்மீரின் தவறான வரைபடத்தைக் காட்டும் இணைப்பை நீக்குமாறு விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற விஷமச்செயல்களை நிறுத்தாவிட்டால் இந்தியாவில் விக்கிபீடியாவின் சேவை முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பூட்டான் உறவு எப்போதும் சுமூகமாக இருந்து வரும் நிலையில் இரு நாட்டு உறவுகளை கொச்சைப் படுத்தும் வகையில் சமீபத்தில் டுவிட்டர் பதிவில் விக்கிபீடியா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லையை தவறாக சித்தரித்தது என்று சத்ராசல் சிங் என்பவர் தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருந்தார்.
இதையடுத்து அரசு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறுவதால் விக்கிப்பீடியா அந்த தவறான இணைப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
சென்ற நவம்பர் 27 ஆம் தேதி அன்று தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 யின் பிரிவு 69 ஏ இன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதற்கான உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விக்கிபீடியா இந்திய அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறினால், முழு தளங்களுக்கும் அதன் அணுகலைத் தடுப்பது உட்பட நிறுவனத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தனது உரிமைகளுக்கு உட்பட்டுள்ளது என்றும் ANI அறிக்கையுடன் விக்கிபீடியா இன்னும் அந்த வரைபடத்தை சரிசெய்யவில்லை என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில், டுவிட்டர் ஜம்மு-காஷ்மீரை மக்கள் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக சித்தரித்தது, இதையடுத்து இந்திய அரசாங்கம் கோபமான கடிதத்தை எழுதிய பின்னர் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தால் பிறகு முறையாக சரி செய்யப்பட்டது.
என்றாலும் விக்கிப்பீடியா நிறுவனம் அடுத்தடுத்து இந்த தவறுகளை செய்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் தொடர்புகளை இந்தியாவில் வேரோடு பிடுங்க வேண்டும் என கோபத்துடன் சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.